காரில் ஆயில் மாற்றுவதற்கான எளிய வழிகாட்டு முறை

posted 31 May 2014, 18:18 by Mohankumar Gopalsamy   [ updated 31 May 2014, 19:09 ]
கார் எஞ்சின் சூடாவதற்கும், ஸ்மூத்தாக இயங்காததற்கும் எஞ்சினில் இருக்கும் ஆயில் அளவு மற்றும் தரம் மிக முக்கிய காரணமாகிறது. எனவே, கார் நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிலை சரியான இடைவேளிகளில் மாற்றுவது மிக அவசியம்.

காரில் ஆயில் மாற்றுவதற்காக மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டருக்கு சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும் என்பதால், சிலர் இதில் அலட்சியம் காட்டுவது இயல்பு. ஆனால், கார் மக்கர் பண்ணாமல் செல்வதற்கு எஞ்சின் ஆயில் முக்கியமானது.

காரில் ஆயில் மாற்றுவது மிக எளிமையான காரியமே. ஆனால், சிறிது முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். முதலில் எஞ்சினை ஸ்டார்ட் செய்து எஞ்சினை 10 நிமிடங்கள் ஓடவிடவும். இதனால், எஞ்சின் சூடாகி அதில் இருக்கும் ஆயில் சூடேறி இளகிவிடும்.

இதன்மூலம், எஞ்சினுள்ள பழைய ஆயில் முழுவதும் எளிதாகவும், சீக்கிரத்திலும் வெளியேற்றிவிடலாம். பிறகு எஞ்சினை ஆப் செய்து விட்டு ஆக்ஸில் ஸ்டான்டில் வைத்து காரை நிறுத்துங்கள். காருக்கு கீழே சென்று எஞ்சினுக்கு கீழ் இருக்கும் ஆயில் வெளியேற்றுவதற்கான துவாரத்தில் இருக்கும் நட்டை கழற்றிவிடுங்கள்.

ஆயில் ஃபில்டரையும் ரிமூவர் மூலம் அகற்றுங்கள். ஆயில் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்த பின் ட்ரைன் நட்டில் புதிய கேஸிங் ஒன்றை போட்டு ஆயில் கசியாதவாறு இறுக்கமாக மூடிவிடுங்கள். பின்னர், யூஸர் மேனுவலில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தரம் கொண்ட ஆயிலை ஊற்றுங்கள். ஆயில் ஊற்றுவதற்கான மூடி சரி இல்லையென்றால் மாற்றிவிடுங்கள்.

பின்னர், எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஒரு சில நிமிடங்கள் ஓடவிட்டு, டிரைன் நெட், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை பாருங்கள். பின்னர், எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதையும்அளவுகோல் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
Comments