வாகன விபரங்கள்
இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறை
குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும். எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம். இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம். இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும். |
காரில் ஆயில் மாற்றுவதற்கான எளிய வழிகாட்டு முறை
கார் எஞ்சின் சூடாவதற்கும், ஸ்மூத்தாக இயங்காததற்கும் எஞ்சினில் இருக்கும் ஆயில் அளவு மற்றும் தரம் மிக முக்கிய காரணமாகிறது. எனவே, கார் நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிலை சரியான இடைவேளிகளில் மாற்றுவது மிக அவசியம். காரில் ஆயில் மாற்றுவதற்காக மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டருக்கு சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும் என்பதால், சிலர் இதில் அலட்சியம் காட்டுவது இயல்பு. ஆனால், கார் மக்கர் பண்ணாமல் செல்வதற்கு எஞ்சின் ஆயில் முக்கியமானது. காரில் ஆயில் மாற்றுவது மிக எளிமையான காரியமே. ஆனால், சிறிது முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். முதலில் எஞ்சினை ஸ்டார்ட் செய்து எஞ்சினை 10 நிமிடங்கள் ஓடவிடவும். இதனால், எஞ்சின் சூடாகி அதில் இருக்கும் ஆயில் சூடேறி இளகிவிடும். இதன்மூலம், எஞ்சினுள்ள பழைய ஆயில் முழுவதும் எளிதாகவும், சீக்கிரத்திலும் வெளியேற்றிவிடலாம். பிறகு எஞ்சினை ஆப் செய்து விட்டு ஆக்ஸில் ஸ்டான்டில் வைத்து காரை நிறுத்துங்கள். காருக்கு கீழே சென்று எஞ்சினுக்கு கீழ் இருக்கும் ஆயில் வெளியேற்றுவதற்கான துவாரத்தில் இருக்கும் நட்டை கழற்றிவிடுங்கள். ஆயில் ஃபில்டரையும் ரிமூவர் மூலம் அகற்றுங்கள். ஆயில் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்த பின் ட்ரைன் நட்டில் புதிய கேஸிங் ஒன்றை போட்டு ஆயில் கசியாதவாறு இறுக்கமாக மூடிவிடுங்கள். பின்னர், யூஸர் மேனுவலில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தரம் கொண்ட ஆயிலை ஊற்றுங்கள். ஆயில் ஊற்றுவதற்கான மூடி சரி இல்லையென்றால் மாற்றிவிடுங்கள். பின்னர், எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஒரு சில நிமிடங்கள் ஓடவிட்டு, டிரைன் நெட், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை பாருங்கள். பின்னர், எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதையும்அளவுகோல் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். |
1-2 of 2