பெரியவங்க துணையில்லையா ? கர்ப்பகாலத்தில் கவனிங்க
வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தனியாக வசிப்பது சில
நாட்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இடை இடையே குடும்ப உறவினர்களின் நினைவுகள்
வந்து வாட்டும். இதனிடையே கர்ப்பமடைந்து விட்டால் பெண்களின் பாடு பெரும்பாடுதான்.
வீட்டில் பெரியவர்களின் துணை இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை அளவிட
முடியாது. எனவே கர்ப்பகாலத்தில் தனியாய் இருக்கும் மனைவியை கவனிக்க வேண்டியது
ஆண்களின் மிக முக்கியமான கடமையாகிறது. எனவே பிரசவ சிக்கலை தவிர்க்க மகப்பேறு
நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
சத்தான உணவு கர்ப்பிணிகளுக்கு
சத்தான உணவுகளை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தானியவகைகள், முட்டை,
இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் உண்ண வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள்.
இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய
பல பிர்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது. எனவே
சரியான நேரத்திற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும்.
சரியான
மாத்திரைகள்
நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும்
ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த 12வாரங்கள் வரை போலிக் அமில மாத்திரையை தினமும்
தவறாமல் எடுக்க வேண்டும். ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத்
தடுக்கவும், மூளை வளர்ச்சிக்கும் போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில்
இதைச் பரிந்துரை செய்கின்றனர். கீரை வகைகள், புரக்கோழி, தானியங்கள் தானியங்கள்
உள்ளிட்டவை போலிக் அமிலம் நிறைந்தவையாகும். அவற்றை கர்ப்பிணிகளுக்கு வாங்கி
கொடுக்கலாம். அதே சமயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் கடைகளில் கண்ட
மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது.
கண்டதை
சாப்பிடாதீங்க
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள், நன்றாக
வேகவைக்கப்படாத இறைச்சி, சரியாக வேகாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம்
லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ
மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன்
மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத்
தடுக்கலாம்.
ஒட்டுண்ணி நோய்கள்
டோக்சோ
பிளாஸ்மோசிஸ்என்பது கர்ப்ப காலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை
நோய்.இந்நோய் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்போது குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான
நோய்களைத் தோற்றுவிக்கும். எனவே அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு
கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
ஓய்வெடுப்பது
அவசியம்
கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம்,
யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும்
சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன்
எளிதாக சுகப்பிரசவத்திற்கும் உதவும்.
மருத்துவரை அணுகவேண்டும்
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும்,
பிறப்புறுப்பில் ரத்தம் அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில்
ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி
முதலிய அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும். பெரியவரின் துணை
இல்லாதவர்களுக்கு பிரசவ காலம் சற்று சிரமமானதுதான். எனவே மகப்பேறு மருத்துவரின்
ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம். |